சென்னை நவ, 16
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18 ம்தேதி காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.
3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
