சென்னை நவ, 15
மழை ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று காலை சென்னை பனிமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய கனமழை நேற்று முதல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னையின் சாலைப் பகுதிகளில் பனி சூழ்ந்துள்ளன. மார்கழி தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இப்பொழுதே குளிர் காலம் தொடங்கியது போல் காணப்படுகிறது.
