சென்னை நவ, 15
தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதே போல் நவம்பர் 26, 27 இல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvspv.in, voterportal.eci.gov.in ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பிக்கலாம்.