வேலூர் நவ, 15
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டை அரங்கில் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்த தமிழகம் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க வருவோர் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.