Spread the love

சேலம் நவ, 14

சேலம்‌ மாவட்டத்தில்‌ மாநகராட்சிக்குட்பட்ட 3 ஏரிகள்‌, நகராட்சி நிர்வாகத்துறையின்‌ கீழ்‌ 3 ஏரிகள்‌, ஊராட்சிகள்‌ கட்டுப்பாட்டில்‌ 192 ஏரிகள்‌, பேரூராட்சிகள்‌ துறையின்‌ கீழ்‌ 31 ஏரிகளும்‌, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும்‌ மேட்டூர்‌ அணை கோட்டம்‌ கட்டுப்பாட்டில்‌ 18 ஏரிகள்‌ மற்றும்‌ பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்‌ கோட்டம்‌ கட்டுப்பாட்டில்‌ 87 ஏரிகள்‌ என மொத்தம்‌ 334 ஏரிகள்‌ உள்ளன.

மழையினால் சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பெரும்பாலான ஏரி, குளங்களில்‌ நீர்‌ நிரம்பி உள்ளன. ஏரிகள்‌ புணரமைத்தல்‌ மற்றும்‌ ஏரிகளின்‌ வரத்து வாய்கால்கள்‌ உள்ளிட்டவற்றை முறையாக தூர்வாரி வைத்ததன்‌ விளைவாக சேலம்‌ மாவட்டத்தில்‌ மொத்தம்‌ 170 ஏரிகள்‌ தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது.

மேலும்‌, 38 ஏரிகள்‌ 75 சதவீதமும்‌, 126 ஏரிகள்‌ 50 சதவீதத்திற்கு இணையாகயும்‌ நீர்‌ நிரம்பியுள்ளது. காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்‌, கனவாய்ப்‌ புதூர்‌ மற்றும்‌ கோவில்பாடி உள்ளிட்ட இடங்களில்‌ பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ கூடுதல்‌ ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர்‌, மாவட்ட வன அலுவலர்‌ கவுதம்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *