குஜராத் நவ, 13
குஜராத் தொங்கு பால விபத்தில் பெற்றோரை இழந்த 20 குழந்தைகளுக்கு தலா ₹25 லட்சம் என ஐந்து கோடியை அதானி குழுமம் நன்கொடையாக வழங்கியுள்ளது. விபத்தில் ஏழு குழந்தைகள் இரு பெற்றோரையும், பெற்றோரில் ஒருவரை 12 பேரும், ஒரு கர்ப்பிணியின் கணவர் என மொத்தம் 20 குழந்தைகள் கணக்கில் வருகின்றனர். கிடைக்கும் வட்டியை கொண்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இத்தொகை உதவும்.