திருச்சி ஆகஸ்ட், 6
மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டி கருநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற பழனிச்சாமி. கருத்திநாயக்கர் மந்தைக்கு உட்பட்ட இவர் சால எருது ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் காளை மாடு ஒன்று வளர்த்தார். பல்வேறு மந்தைகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இந்த காளை வயது முதிர்வின் காரணமாக நேற்று உயிரிழந்தது.
இதையடுத்து இறந்த காளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தாரை தப்பட்டை, உறுமி சப்தம் முழங்க பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மனிதர்களுக்கு செய்வது போல் அனைத்து வகையான இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in