திருச்சி ஆகஸ்ட், 1
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது மாலைகுளம். இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நீர் முழுவதுமாக நிரம்பியதையடுத்து குளத்தில் அதிகளவில் மீன்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று கிராம மக்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து சிலர் நள்ளிரவே குளத்திற்குள் சென்று பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மீன் பிடிக்க அனுமதித்தனர். இதனைதொடர்ந்து பலரும் மீன்பிடிக்க ஆர்வமாக குளத்திற்குள் இறங்கினர். ஆனால் நள்ளிரவே பலரும் மீன்பிடித்து சென்றதால் காலையில் சென்றவர்கள் மீன்கள் கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதேபோல் 108 ஏக்கர் பரப்பளவிலான மணப்பாறை குளத்திலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
ஆனால் ஏராளமானோர் நள்ளிரவே குளத்தில் மீன்களை பிடித்து சென்றதால் காலையில் மீன் பிடிக்க சென்ற பொதுமக்களுக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.
#Vanakambharatham#Fishingfestival#news