மயிலாடுதுறை நவ, 13
தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.
இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கரும்பு முருகன் பன்னிப்பள்ளம் சேகர், செந்தில் அட்மா குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.