தென்காசி நவ, 12
சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.