கடையம் நவ, 9
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர் ராசம்மாள் லெட்சுமணன், ஊராட்சி உறுப்பினர் சந்தண ரோஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா, கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், சாமுவேல், பொன்னுத்துரை, செல்லத்துரை, ஆத்திச் செல்வன், பெரியசாமி, மற்றும் கோபி ஜனார்த்தனன், பொன்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.