திருமலை நவ, 11
திருமலை திருப்பதி தேவஸ்தான லட்டுவில் பெரும் ஊழல் நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி ட்வீட் செய்துள்ளது. அதில் திருடர்களுக்கு அதிகாரம் கொடுப்பது கொள்ளையடிக்க அனுமதி வழங்குவது போன்றது என்பதை ஜெகன் அண்ட் கோ நிரூபித்துக் வருகிறது. கொள்ளையடிக்க புனிதமான திருப்பதி லட்டுவில் கை வைத்துள்ளனர். 175 கிராம் இருக்க வேண்டிய திருப்பதி லட்டு எடையை நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்துள்ளது.