புதுடெல்லி நவ, 11
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நவ 14 ம் தேதி இந்தோனேசியா செல்ல உள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 ம் தேதி வரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும். இந்தோனேஷியா அதிபரின் அழைப்பை ஏற்று, 17 வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி பயணம் செல்ல உள்ளார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பையன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.