புதுடெல்லி நவ, 9
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து லலித் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் லலித், சந்திர சூட்டை பரிந்துரை செய்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு அவரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார். இந்த சூழலில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.