சென்னை நவ, 11
மாலத்தீவு தலைநகர் மாலுவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் இந்திய அரசின் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.