சென்னை நவ, 10
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.