சென்னை நவ, 10
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு உரிமை முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். இதனால் மக்கள் நலன்கருதி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மத்திய அரசிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.