சென்னை நவ, 9
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரிக்கை உள்ளது.