சேலம் நவ, 9
சேலம் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 12 ம்தேதி தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.
இம்முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கையை அளிக்கும் பொதுமக்கள், அட்டைதாரா்கள் சாா்பாக ஆன்லைன் பதிவுகளை வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.