ஆஸ்திரேலியா நவ, 9
டி20 உலக கோப்பையின் அரையிறுதி இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆரம்பம் மோசமாக இருந்தாலும் அட்டகாசமாக திருப்பம் கொடுத்த பாகிஸ்தான் கடந்த மூன்று ஆட்டங்களில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கினர். மறுமுனையில் நியூசிலாந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெற்றி யாருக்கு என்று இன்றைய போட்டி மிக பரபரப்பாக ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.