Spread the love

சீர்காழி நவ, 8

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவரை கட்டளை தம்பிரான் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.

அப்போது ஆளுனர் இல.கணேசன் தருமபுரம் ஆதீனம் சார்பில் 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்தார்.

தருமை ஆதீனம் வேத சிவாகமம் பாடசாலை மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள். அதனைக் கேட்டு அவர்களை வணங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *