புதுடெல்லி நவ, 8
பாஜக முன்னோடிகளில் ஒருவரான அத்வானியின் 95 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நீண்டகாலம் பாஜகவின் தலைவராக இருந்ததில் அத்வானிக்கே முதலிடம். அவரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உடனிருந்தார்.