ஈரோடு நவ, 8
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் அந்தியூர்- அத்தாணி செல்லும் சாலையில் பாலம் அருகே மண பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 6 ம் தேதி கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கார்த்திகை தீப அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் திவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வித விதமாக டிசைன்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மண் அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறார்கள்.