Spread the love

பவானி நவ, 6

ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவில் பின்பகுதியில் உள்ள காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி பரிகார பூஜைகள் செய்து வழிபட ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகை தந்து பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நன்கொடை வழங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவ தற்காகவும் யுபிஐ ஐடியுடன் கூடிய க்யூஆர் கோடு அட்டைகள் வங்கி சார்பில் கோவில் உதவி ஆணையர் சுவாமி நாதனிடம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் பக்தர்கள் எந்த ஒரு யுபிஐ ஐடி மூலம் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் யுபிஐ போன்ற செல்போன் செயலிகளை பயன்படுத்தி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தங்களது காணிக்கைகளை செல்போன் வழியாக செலுத்தலாம் எனவும், கோவிலில் 20 இடங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *