கரூர் நவ, 6
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 ம் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம் கருர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்து பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்துக்கள். காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நுகர்வோர் வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.