விருதுநகர் நவ, 5
ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். மழையால் ரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலாளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.