சிவகங்கை நவ, 4
சிவகங்கையில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.