சிவகங்கை நவ, 9
மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். முத்தனேந்தல் பகுதியில் ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் திருப்புவனம் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். அனைத்து இடங்களுக்கு சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணியை தமிழரசி சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்