கிருஷ்ணகிரி நவ, 3
தருமபுரி வட்டம் செட்டி கரை ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மூன்று புள்ளி 66 கோடியில் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டது புதிதாக கட்டப்பட்ட இந்த விடுதியை மாணவர்களின் பயன்பாட்டுக்காக சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விடுதி கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்து விளக்கேற்றி விடுதி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். மேலும் தர்மபுரி கோட்டாட்சியர் ஜெயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.