நாகர்கோவில் நவ, 3
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் அரசு பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத்,லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.