நாகர்கோவில் நவ, 11
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், தக்கலை, இரணியல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது.
கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் 12வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது