Spread the love

திண்டுக்கல் நவ, 3

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி அலுவலக வரவு-செலவு கணக்குகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதம் நடந்தது.

மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான அமர்வு படி, தினப்படி, நிலையான பயணப்படி வழங்குவதற்கான ஒப்புதல் அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *