திண்டுக்கல் நவ, 1
திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்பு இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் லஞ்சம் கொடுப்பது குற்றம், லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ரூபாகீதாராணி சார்பு ஆய்வாளர் ரபிக் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.