தென்காசி அக், 30
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் யூனியன் நகர் மன்ற தலைவர் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு தாம்பூல தட்டு, டிபன் பாக்ஸ் ஆகிய பொருட்களை சொந்த செலவில் வழங்கி சிறப்புரையாற்றினர். வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் திமுக. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், ஒன்றிய நகர் மன்ற உறுப்பினர் முனியராஜ், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.