தென்காசி அக், 28
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27 ம்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு சங்கரன்கோவில் துணை ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.