திருவனந்தபுரம் அக், 28
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது அவை கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காயங்குளம் காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து கள்ள நோட்டுகளை செலுத்தியவரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த நோட்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டது என காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.