Spread the love

பெங்களூரு அக், 28

கர்நாடகத்தில் நேற்று 2 ஆயிரத்து 763 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 173 பேருக்கும், ஹாசன், கோலார், ராய்ச்சூர், உடுப்பியில் தலா 3 பேருக்கும், கலபுரகியில் 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 233 பேர் குணம் அடைந்தனர். ஆயிரத்து 915 போ் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.12 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *