விருதுநகர் ஆகஸ்ட், 5
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வழங்குவதற்கு பதிலாக சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுதந்திரக்கிளாரா கோரிக்கை விளக்க உரையாற்றினார். பல்வேறு அரசு அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார். மாநில செயலாளர் சுப்புக்காளை நிறைவுறையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ்தர் நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in