ஊட்டி அக், 28
தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, உதகை பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கட்டபெட்டு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.