நெல்லை அக், 28
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம். இங்குள்ள பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது,
நாங்கள் 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற 10 ம் தேதிக்குள் இந்த முள்வேலிகளை அகற்றாவிட்டால் விவசாய சங்கம், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சார்பில் முள்வேலிகளை அகற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பாதையை அடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.