வேலூர் அக், 27
வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச் சனை, காலை 9 முதல் 10 மணி வரை நடக்கிறது. அதோடு, தினமும் கந்த புராண பாரா யணம் நடக்கிறது. மேலும், 30 ம் தேதி மாலை 6.30க்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது.
இதையடுத்து 31 ம்தேதி மாலை 6 மணிக்கு மேல், ஸ்ரீமகா கந்தர் சஷ்டி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஜல கண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.