மயிலாடுதுறை அக், 26
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் சி. கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கே கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.