புதுக்கோட்டை அக், 23
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த நிலையில் இடி தாக்கி இறந்த கோகிலாவின் கணவர் மற்றும் குழந்தைகளிடம் அரசின் பேரிடர் கால குடும்ப நிவாரண உதவித்தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வட்டாட்சியர் ராஜேஸ்வரி சங்கம் விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.