சிவகங்கை அக், 22
சிங்கம்புணரி வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் புரவலர் திட்டத்தின் கீழ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா ரூ.10,000 தனது சொந்த நிதியின் கீழ் வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவைத் தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கோபி, மீனா, மலையரசி, பாரதி, முத்துலட்சுமி, கஸ்தூரி, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.