சிவகங்கை அக், 20
சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் துப்புரவு அலுவலர் ஜெயபால் கடைகளிலிருந்து 180 கிலோ பிளாஸ்டிக் பை, கப் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். அரசு விதியை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.