Spread the love

சிவகங்கை அக், 19

காரைக்குடி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

யூனியன் நகர் மன்ற தலைவர் சொர்ணம் அசோகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் சிவகங்கை துணை இயக்குனர் கவிதா ராணி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி, செம்பனூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு தோல், பல், எலும்பு, இதயம், காது, மூக்கு, தொண்டை, கண், மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவம் பொது மருத்துவம் ஆகிய பரிசோதனை மற்றும் இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், 228 அரசு அலுவலர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *