சேலம் அக், 22
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 4 நாட்களாக மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனல் மின் நிலையத்தில் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல முடியாததும், வெளியே இருப்பவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து மேட்டூர் உதவி ஆட்சியர் சரவணகுமார், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் கருமலைக்கூடல் காவல்துறையினர் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை யடுத்து தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.