Spread the love

நெல்லை அக், 20

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள திருப்பணிபுரம் என்ற மலை கிராமத்தில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இயற்கை முறையில் எலுமிச்சை,மிளகு,தென்னை,வாழை, நார்த்தங்காய் போன்ற விவசாயம் செய்து வருகின்றனர் இந்த மலைகிராமத்திற்கு பாபநாசம் வனச்சோதனை சாவடி வழியாகத்தான், ஆற்றை கடந்து சென்று வர முடிகிறது.

இந்த நிலையில் வனச்சட்டத்தினை பயன்படுத்தி வனத்துறையினர் விதித்துள்ள கட்டுபாடுகளால் இந்த கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக்கோரி கடந்த 1979 – ம் ஆண்டு மின்சார வாரியத்திடம் மனு அளித்ததாகவும்,மற்றும் குழாய் இணைப்பு வழங்கி அதன் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரனை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும், அவற்றை பரிசீலித்து மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், குழாய் மூலம் 4 வாரத்திற்குள் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட கூடாதென வனத்துறைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு திருப்பணிபுரத்தை சேர்ந்த கிராமத்தினர் மனித உரிமை ஆணையத்திற்கு நன்றியை தெரிவித்தனர், மேலும் அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *