Spread the love

ஈரோடு அக், 20

கரடிப்பட்டியூர் பெரிய ஏரி அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ளது கரடிப்பட்டியூர் பெரிய ஏரி. இது 55 ஏக்கர் பரப்பளவில் 30 முதல் 50 அடி ஆழம் வரை உள்ளது. கடந்த மாதத்தில் இப்பகுதியில் கன மழை பெய்ததில் கரடிப்பட்டியூர் ஏரியை தவிர மற்ற அனைத்து ஏரிகளும் நிரம்பின.

இதைத்தொடர்ந்து குருவரெட்டியூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததின் காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கரடிப்பட்டியூர் ஏரி வேகமாக நிரம்பியது. அதன் முழுக்கொள்ளளவை எட்டி உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதையடுத்து குருவரெட்டியூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கு சென்று பூஜைகள் செய்து தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செய்து வணங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *