விழுப்புரம் அக், 19
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 1.7.2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். பொருளாளர் கலியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருணகிரி தொடக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் துரைக்கண்ணு, துணைத்தலைவர்கள் சிவநேசன், கார்த்திகேயன் ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர்.